கனேடியர் கொலையின் பின்னணியில் இந்தியா இருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட விவகாரம்: அந்தர் பல்டி அடித்தது கனடா
கனடாவில் நடைபெற்ற குற்றச்செயல்களுடன் இந்திய பிரதமரை தொடர்புபடுத்தவில்லை என கனடா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தர் பல்டி அடித்தது கனடா
காலிஸ்தான் பிரிவினைவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கனடாவில் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதற்கான நம்பத்தகுந்த ஆதாரம் தன்னிடம் இருப்பதாக கனடா பிரதமர் தெரிவித்ததைத் தொடர்ந்து இருநாடுகளுக்கிடையிலான தூதரக உறவு கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், நவம்பர் 20ஆம் திகதி, கனடாவை மையமாகக் கொண்டு இயங்கிவரும் Globe and Mail பத்திரிகை, ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொலையுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோரை தொடர்புபடுத்தி செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.
ஆனால், தற்போது அந்த செய்திக்கு கனடா தரப்பிலிருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடா அரசு, கனடாவில் நடைபெற்ற குற்றச்செயல்களுடன் இந்திய பிரதமரை தொடர்புபடுத்தவில்லை என இன்று கனடா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் நடைபெற்ற குற்றச்செயல்களுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கோ, வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கருக்கோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலுக்கோ தொடர்பு இருப்பதாக கனடா அரசு தெரிவிக்கவும் இல்லை, அதற்கான ஆதாரம் இருப்பதாக கனடா அரசுக்கு தெரியவும் தெரியாது என கனடா பிரதமரின் தேசிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை ஆலோசகரான Nathalie G Drouin என்பவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |