என்ஜின் வழங்க அமெரிக்க நிறுவனம் உறுதியளித்ததால் தேஜஸ் விமான உற்பத்தியை விரிவுபடுத்த இந்தியா இலக்கு
அமெரிக்க என்ஜின் அடுத்த மாதம் வருவதால் தேஜஸ் விமான உற்பத்தியை விரைவுபடுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.
இந்தியா திட்டம்
போர் விமான என்ஜின்களை அடுத்த மாதம் முதல் விநியோகிப்பதாக அமெரிக்க நிறுவனம் உறுதியளித்துள்ளது. இதனால், தேஜஸ் போர் விமானங்களின் உற்பத்தியை விரைவுபடுத்த எச்ஏஎல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் தேஜஸ் போர் விமானங்களுக்கான ஜிஇ-404 ரக என்ஜினை அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் விநியோகம் செய்கிறது.
இந்த நிறுவனத்திடம் இருந்து கடந்த 2021-ம் ஆண்டில் 9 என்ஜின்களை ரூ.5,375 கோடிக்கு வாங்க எச்ஏஎல் நிறுவனம் ஓர்டர் கொடுத்தது. இதற்கான விநியோகத்தை அமெரிக்க நிறுவனம் 2 ஆண்டுகள் தாமதம் செய்தது.
இந்நிலையில், இந்த என்ஜின்கள் அடுத்த மாதம் முதல் விநியோகம் செய்யப்படும் எனவும், அடுத்தாண்டுக்குள் 12 என்ஜின்கள் வழங்கப்படும் என்றும் அமெரிக்க நிறுவனம் உறுதியளித்துள்ளது.
அதேபோல, ஒவ்வொரு ஆண்டும் 20 என்ஜின்கள் வழங்குவதாகவும் கூறியுள்ளது. இதனால், தேஜஸ் போர் விமான உற்பத்தியை விரிவுபடுத்த எச்ஏஎல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இங்கு தேஜஸ் மார் க் 1ஏ ரகத்தை சேர்ந்த 3 விமானங்கள் மற்றும் 4 பயிற்சி விமானங்கள் என்ஜின் பொருத்தப்படாமல் உள்ளன.
அதேபோல, தேஜஸ் மார் க் 1ஏ ரக விமானத்தில் எலக்ட்ரானிக் போர் கருவிகள், இஸ்ரேல் ரேடார் ஆகியவை பொருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |