55 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை பறிகொடுத்த இந்தியா! மளமளவென தட்டி தூக்கிய என்கிடி-ரபாடா
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 327 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட இருக்கிறது.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26 , Centurion மைதானத்தில் தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோலி, முதல் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.
முதல் நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்திருந்தது. மயங்க் அகர்வால் (60), புஜாரா (0), கோலி (35) ரன்களில் ஆட்டமிழந்தனர்.
கே.எல்.ராகுல் (122), ரகானே (40) ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
2வது நாள் ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று டிசம்பர் 28ம் திகதி 3வது நாள் ஆட்டம் தொடங்கியது.
3வது நாள் முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணி, 55 அணிகளுக்கு 7 விக்கெட் இழந்து 327 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
கே.எல்.ராகுல் 123 ரன்களில் அவுட்டானார். அவரை தொடர்ந்து ரகானே (48), அஸ்வின் (4), ரிஷப் பண்ட் (8), தாக்கூர் (4), முகமது ஷமி (8), பும்ரா (14) ஆகியோர் மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர் என்கிடி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ரபாடா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார், ஜேன்சன் 1 விக்கெட் எடுத்தார்.
இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் களமிறங்கி விளையாடி வரும் தென் ஆப்பிரிக்க அணி 10 ஓவர் முடிவில் 30 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.