சதமடித்து சாதித்த ஸ்ரேயாஸ்..! 2வது நாள் நியூசிலாந்து ஆதிக்கம்.. மளமளவென விக்கெட்டுகளை இழந்து இந்தியா ஆல் அவுட்
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 345 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என இழந்து ஒயிட் வாஷ் ஆனது.
இதைத்தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கான்பூரில் நேற்று தொடங்கியது.
டாஸ் வென்ற பேட்டிங் செய்த ரகானே தலைமையிலான இந்திய அணி முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்தது.
சிரேயாஸ் ஐயர் 75, ஜடேஜனா 50 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். இன்று இரண்டாவது நாள் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 345 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அசத்தினார். அறிமுக போட்டியில் சதம் அடித்த 16வது இந்திய வீரர்கள் என்ற சாதனையை ஸ்ரேயாஸ் ஐயர் படைத்தார்.
ICYMI - Dream Start: Shreyas Iyer's impressive century on debut.
— BCCI (@BCCI) November 26, 2021
WATCH ?https://t.co/8vPIQUfgXJ #INDvNZ @Paytm @ShreyasIyer15 pic.twitter.com/OWpvh8FnbG
அகர்வால் (13), கில் (52), புஜாரா (26), ரகானே (35), சிரேயாஸ் ஐயர் (105), ஜடேஜா (50), சாஹா (1), அஸ்வின் (38), அக்சர் படேல் (3), இஷாந்த் சர்மா (0) ரன்களில் ஆட்டமிழந்தனர். நியூசிலாந்து தரப்பில் பந்து வீச்சில், சௌதி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
? for Tim Southee! It's 4 this morning & his 13th FIVE wicket bag as he gets one to seam away from Patel & take the outside edge for Blundell's 4th catch. India 313-8. Live scoring | https://t.co/yGSlW6a2d5 #INDvNZ pic.twitter.com/1KA59InzVI
— BLACKCAPS (@BLACKCAPS) November 26, 2021
கைல் ஜேமிசன் 3, அஜாஸ் படேல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். தற்போது, கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் களமிறங்கி விளையாடி வருகிறது.