இந்தியா - அமெரிக்கா இடையே ரூ.7995 கோடி ஒப்பந்தம்: MH-60R சீஹாக் ஹெலிகாப்டர் பராமரிப்பு தொகுப்பு
இந்தியா - அமெரிக்கா இடையே ரூ.7995 கோடி மதிப்பிலான இராணுவ ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது.
இந்தியா - அமெரிக்கா இடையே ஒப்பந்தம்
இந்தியா -அமெரிக்கா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பின் புதிய மைல்கல்லாக, இந்திய கடற்படைக்கான MH-60R சீஹாக்(Seahawk) ஹெலிகாப்டர் படைக்கான பராமரிப்பு தொகுப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியா-அமெரிக்கா இடையே மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 946 மில்லியன் டொலர்கள்(சுமார் ரூ.7,995 கோடி) ஆகும்.
இந்த தகவலை X தளத்தில் அமெரிக்க வெளியுறவுத் துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பணியகம் வெளியிட்டுள்ளது.
முக்கிய நோக்கம்
வெளியான அறிவிப்பின் படி, இந்திய பாதுகாப்பு அமைச்சகம் லாக்ஹீட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 24 MH-60R சீஹாக் ஹெலிகாப்டருக்கான பராமரிப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம் இந்திய கடற்படையின் திறன்கள் அதிகரிப்பதோடு, அமெரிக்காவுடன் இணைந்து செயல்படும் திறனையும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்தியாவிலேயே பராமரிப்பு உள்கட்டமைப்பை நிறுவி வெளிநாடுகளின் சார்பை குறைத்தல் ஆகியவையும் இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கங்கள் ஆகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |