NOTAM வெளியிட்ட இந்திய இராணுவம்: வடகிழக்கு, மேற்கு எல்லையில் குவிக்கப்படும் படைகள்
இந்தியாவின் வான்வழி பாதுகாப்பு தயார் நிலையை மேலும் அதிகரிக்கும் விதமாக நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் பெரிய அளவிலான ராணுவ செயல்பாட்டு பயிற்சிகளை தொடங்கியுள்ளது.
கிழக்கு எல்லையில் தீவிரமடையும் இந்திய விமானப்படையின் ஆதிக்கம்
இந்தியா வட கிழக்கு எல்லை பகுதியானது சீனா, பூடான், மியான்மர் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளுடன் பகிர்ந்து வருகிறது.

இப்பகுதிகள் ராணுவ ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் நிலையில், இந்தியா தனது வான் பாதுகாப்பு திறன்களை வட கிழக்கு பிராந்தியம் அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இதற்காக விமானிகளுக்கு அறிவிப்பு (NOTAM - Notice to Airmen) என்ற விரிவான இராணுவ செயல்திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.
இந்த NOTAM என்பது நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக குறிப்பிட்ட பகுதியில் வான்வெளியில் செயல்படும் சிவில் விமானங்களின் போக்குவரத்தை கட்டுப்படுத்துவது குறித்த விரிவான ஆலோசனையாகும்.
இந்த அறிவிப்பின் மூலம் இந்திய விமானப் படையின் பாதுகாப்பு பயிற்சிக்கு தெளிவான செயல்பாட்டுச் சூழலை உறுதி செய்யப்படும்.
அறிவிப்புகளின் படி, இந்திய விமானப்படை பயிற்சி திகதிகள் நவம்பர் 6 மற்றும் 20 திகதிகள், டிசம்பர் 4 மற்றும் 18ம் திகதிகள், ஜனவரி 2026: 1 மற்றும் 15ம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு எல்லை பயிற்சி
அதே நேரத்தில் பாகிஸ்தான் எல்லையில் 12 நாள் இந்திய ராணுவத்தின் முப்படை பயிற்சி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயிற்சிக்கு திர்சூல் பயிற்சி என பெயரிடப்பட்டுள்ளது, ஆபரேஷன் சிந்தூர்-க்கு பிறகு பாகிஸ்தான் எல்லையில் நடைபெறும் மிகப்பெரிய ராணுவ பயிற்சி இதுவாகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |