கனேடிய தூதரக அதிகாரிகள் தொடர்பில் இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்
கனேடிய தூதரக அதிகாரிகள் தொடர்பில் இந்திய வெளியுறவு அமைச்சகம் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.
கனேடிய செய்தித்தொடர்பாளர் தெரிவித்த தகவல்
கனடாவின் சர்வதேச விவகாரங்கள் துறையின் செய்தித்தொடர்பாளரான Jean-Pierre Godbout என்பவர், இந்தியாவிலிருக்கும் கனேடிய தூதரக அதிகாரிகள் சிலருக்கு சமூக ஊடகங்கள் வாயிலாக அச்சுறுத்தல்கள் வந்துள்ளதாகவும், அச்சுறுத்தல்களின் விளைவாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்தியாவிலிருக்கும் கனேடிய தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையைக் குறைக்க கனடா முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்
இந்நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளரான Arindam Bagchi, கனடாவிலிருக்கும் இந்திய தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை விட, இந்தியாவிலிருக்கும் கனேடிய தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாகவும், அது இரு தரப்பிலும் சமமாக இருக்கவேண்டும் என இந்தியா கனடா அரசிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், கனடா அரசின் குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கம் கொண்டவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |