ஹர்தீப் சிங் நிஜார் கொலை வழக்கு: கனடா ஆதாரத்தைக் கொடுத்தால் விசாரிக்க தயார்! இந்திய வெளியுறவு அமைச்சர்
கனடா ஆதாரத்தை வழங்கினார் நிஜார் கொலை வழக்கில் விசாரணைக்கு தயாராக இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா-கனடா இடையே உருவான சர்ச்சை
கனடாவில் சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து இந்த கொலை வழக்கில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக கனடா நேரடி குற்றச்சாட்டை முன்வைத்தது.
இந்த குற்றச்சாட்டை இந்தியா மறுத்ததுடன், இதனால் வெடித்த சர்ச்சையின் விளைவாக இருநாடுகளும் தங்களது தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்றுக் கொண்டனர்.
Sikh separatist leader Hardeep Singh Nijjar(EPA-EFE)
ஜெய்சங்கர் பேட்டி
இந்நிலையில் சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொலை வழக்கில் உரிய ஆதாரத்தைக் கொடுத்தால் நிச்சயம் விசாரணையை மேற்கொள்ள தயாராக இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய அவர், கனடாவிடம் இந்தியாவின் நிலைப்பாட்டை பலமுறை எடுத்து கூறிவிட்டோம், கனடாவின் அரசியல் இந்தியாவில் பிரிவினைவாதத்தை தூண்டுவதாக இருக்க கூடாது. அதே சமயம் இந்தியாவில் வன்முறையை தூண்டும் சக்திகளுக்கு கனடா ஆதரவு வழங்க கூடாது.
நிஜார் கொலை வழக்கில் இந்தியாவிடம் கனடா எத்தகைய ஆதாரத்தையும் இதுவரை கனடா பகிரவில்லை.
இந்தியா மீது இப்படியொரு குற்றச்சாட்டை முன் வைக்க முடியுமானால் அதற்கான ஆதாரத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள், நாங்கள் அதற்கடுத்து விசாரணையை மேற்கொள்ள தயராக இருக்கிறோம், ஆனால் அவர்கள் இன்னும் ஆதாரத்தை கொடுக்கவில்லையே! என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |