மழையால் 13.2 ஓவரிலேயே நின்ற இந்தியா, அவுஸ்திரேலியா டெஸ்ட்
இந்தியா, அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட்டின் முதல் நாள் ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டது.
பிரிஸ்பேனின் காபா மைதானத்தில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் இன்று தொடங்கியது.
நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி அவுஸ்திரேலிய அணியில் உஸ்மான் கவாஜா (Usman Khawaja), நாதன் மெக்ஸ்வீனி (Nathan McSweeney) தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
மழையால் ஆட்டம் தடைப்பட்டது. இதனால் 13.2 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் முதல் நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
அவுஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 28 ஓட்டங்கள் எடுத்துள்ளது. கவாஜா 19 (47) ஓட்டங்களுடனும், மெக்ஸ்வீனி 4 (33) ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |