இந்தியா-அவுஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட் தொடர்: பேட் கம்மின்ஸ் பங்கேற்பதில் சிக்கல்
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் பேட் கம்மின்ஸ் இடம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்தியா-அவுஸ்திரேலியா தொடர்
இந்திய கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.
இதனை தொடர்ந்து அடுத்த மாதம் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.
இந்நிலையில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் மற்றும் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளருமான பேட் கம்மின்ஸ் இந்த தொடரில் கலந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆஷஸ் தொடரில் ஏற்பட்ட காயம்
அவுஸ்திரேலிய அணி சமீபத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடியது.
அப்போது கடைசி டெஸ்ட் போட்டியின் போது அவுஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸுக்கு காயம் ஏற்பட்டது. இதற்கு பேட் கம்மின்ஸ் சிகிச்சை பெற்று வருவதால் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பேட் கம்மின்ஸ் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |