ரூ.1000 கோடி இழப்பு.., பாகிஸ்தானுக்கு ஆயுத சப்ளை செய்ததால் துருக்கி ஆப்பிளை புறக்கணித்த இந்திய வியாபாரிகள்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதலின் போது பாகிஸ்தானுக்கு ஆயுத சப்ளை செய்ததால் துருக்கி ஆப்பிளை இந்திய வியாபாரிகள் புறக்கணித்துள்ளனர்.
இந்திய வியாபாரிகள் புறக்கணிப்பு
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த மோதலின் போது துருக்கி மற்றும் சீனா கொடுத்த ஆயுதங்களை பாகிஸ்தான் நாடு பயன்படுத்தியது. இதனால் துருக்கி பொருட்களை இந்திய மக்கள் புறக்கணித்துள்ளனர்.
துருக்கியில் இருந்து இந்தியாவுக்கு ஆப்பிள் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆப்பிளை மும்பை, புனே வியாபாரிகள் புறக்கணிக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் புனே மார்க்கெட்டில் ஆப்பிளின் விலை கிலோவிற்கு ரூ.20 அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக புனே ஆப்பிள் மார்க்கெட்டில் வியாபாரம் செய்யும் சுயோக் என்பவர், "பாகிஸ்தானுக்கு ஆயுத சப்ளை செய்த துருக்கியின் ஆப்பிளை வாங்காமல் புறக்கணித்துள்ளோம்.
அதற்கு பதிலாக ஹிமாச்சல பிரதேசம், ஈரான், வாஷிங்டன், நியுசிலாந்து ஆகிய இடங்களில் இருந்து ஆப்பிள் வாங்குகிறோம். இது தேச பக்தி சார்ந்தது" என்றார்.
இதன் காரணமாக துருக்கிக்கு 1000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், ராஜஸ்தான் வியாபாரிகள் துருக்கியில் இருந்து மார்பிள்ஸ் இறக்குமதி செய்வதில்லை என்று முடிவு செய்ததால் துருக்கிக்கு 2500 முதல் 3000 கோடி அளவுக்கு வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |