அரசு ஊழியர்கள் அலுவலக பயன்பாட்டுக்கு ChatGPT, DeepSeek AI பயன்படுத்த இந்திய அரசு தடை
அரசு ஊழியர்கள் அலுவலக பயன்பாட்டுக்குகாக ChatGPT, DeepSeek பயன்படுத்துவதை இந்திய நிதி அமைச்சகம் தடை செய்துள்ளது.
இந்திய அரசு உத்தரவு
உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எனப்படும் Artificial Intelligence வேகமாக பரவி வருகிறது. அந்தவகையில் தற்போது சீனாவில் உருவாக்கப்பட்டுள்ள டீப்சீக் (DeepSeek) பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் சீனாவில் தொழில்நுட்பங்கள் ரீதியாக கடுமையான போட்டி நிலவி வருகிறது.
அமெரிக்க நிறுவனமான Open AI உருவாக்கிய ChatGPT, கூகுள் நிறுவனத்தின் Gemini AI, Meta AI, Cork AI ஆகியவற்றிற்கு போட்டியாக டீப்சீக் களமிறங்கியுள்ளது.
இந்நிலையில், அரசு ஊழியர்கள் அலுவலக பயன்பாட்டுக்குகாக ChatGPT, DeepSeek பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய நிதித்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இதனால், அரசின் பாதுகாக்கப்பட்ட தரவுகள், ஆவணங்கள் ஆகியவற்றின் ரகசியங்கள் சீர்குலையும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஓபன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன் இந்தியா வந்துள்ள நிலையில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரை சந்திக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |