வெற்றி பெற்றும் தரத்தை காட்ட முடியாத இந்தியா., பீல்டிங்கில் படுமோசம்
2025 ஆசிய கிண்ணம் கிரிக்கெட் தொடரில் இந்தியா வங்காளதேசத்தை 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்த வெற்றியுடன் இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அனால், இந்த போட்டியில் இந்திய அணி தங்கள் தரத்தை கட்ட முடியாமல் வரலாற்றில் இல்லாத லாவுக்கு பல தவறுகளை செய்துள்ளது என விமர்சனம் எழுந்துள்ளது.
இந்தியாவின் பேட்டிங்கில் அபிஷேக் சர்மா 37 பந்துகளில் 75 ஓட்டங்கள் அடித்து சிறப்பாக விளையாடினார். இருப்பினும் மற்ற வீரர்கள் தடுமாறியதால் இந்தியா 168 ஓட்டங்களுடன் சுமாரான எண்ணிக்கையை பதிவு செய்தது.
வங்காளதேசம் பதிலடி கொடுக்க முயன்றபோது, சைஃப் ஹசன் 51 பணத்துக்களில் 69 ஓட்டங்கள் அடித்தார்.
ஆனால், நான்கு முறை இந்திய வீரர்களால் அவரது கேட்ச் கைவிடப்பட்டதால் அவர் தனது இன்னிங்ஸை நீட்டிக்க முடிந்தது.
இந்திய அணியின் பீல்டிங் மிகவும் மோசமாக இருந்தது.
பாகிஸ்தானுடன் நடந்த முந்தைய போட்டியில் 4 கேட்சக்ள் விடப்பட்ட நிலையில், வங்காளதேசத்திற்கு எதிராக 5 கேட்ச்கள் தவறவிடப்பட்டன. இது இந்திய அணியின் பீல்டிங் தரத்தின் கவலைக்குரிய நிலையை வெளிப்படுத்துகிறது.
சைஃப் ஹசன், T20I போட்டிகளில் ஒரே அணிக்கு எதிராக 4 முறை தவறவிடப்பட்ட முதல் வீரராக வரலாற்றில் இடம்பெற்றார்.
இந்த வெற்றியுடன் இந்தியா இறுதிப்போட்டிக்கு சென்றாலும், பீல்டிங் மற்றும் ஒட்டுமொத்த அணியின் செயல்திறன் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India vs bangladesh, India poor Fielding, India catch drop, Asia Cup 2025