இங்கிலாந்து அணியை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றி சாதனை படைத்த இந்தியா! வாழ்த்து தெரிவித்த இலங்கை ஜாம்பவான்
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை வென்ற இந்திய அணிக்கு இலங்கை ஜாம்பவான் அர்னால்ட் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில், இ்ந்தியா 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.
மேலும் 5 போட்டிகள் கொண்ட இந்த 20 ஓவர் தொடரை இந்தியா 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.
2 முன்னணி விக்கெட்டை வீழ்த்திய இந்திய பவுலர் புவனேஷ்வர்குமார் ஆட்டநாயகன் விருதையும், 5 ஆட்டத்தில் ஆடி 3 அரைசதம் உள்பட 231 ரன்கள் சேர்த்த இந்திய கேப்டன் விராட் கோஹ்லி தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.
இது குறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ருசல் அர்னால்டு டுவிட்டரில், நல்ல தொடர்! அதிக போட்டி நிறைந்த தொடராக இருந்தது.
இந்திய அணிக்கு வாழ்த்துக்கள், இந்த வெற்றி மிகப்பெரியது என தெரிவித்துள்ளார்.
Good series .. highly competitive #INDvENGt20 Congratulations to #TeamIndia A win in many ways as the biggest being . Creating more depth !
— Russel Arnold (@RusselArnold69) March 21, 2021