ஆசிய கிண்ணம்... சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது இந்திய அணி

Virat Kohli Indian Cricket Team Hong Kong Suryakumar Yadav Asia Cup 2022
By Arbin Aug 31, 2022 07:07 PM GMT
Report

15வது ஆசிய கிண்ணம் கிரிக்கெட் தொடரில் ஹாங்காங் அணிக்கு எதிராக 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

ஐக்கிய அமீரகத்தின் துபாய் மாகாணத்தில் நடைபெற்ற 4வது லீக் ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வென்ற ஹாங்காங் அணி பந்து வீச்சை தெரிவு செய்தது. இதனையடுத்து இந்திய அணியில் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா களமிறங்கினர்.

பவர்பிளேவில் இந்த ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரோகித் சர்மா 13 பந்துகளில் 21 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆயுஷ் ஷுக்லா பந்துவீச்சில் ஐசஸ் கானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து விராட் கோஹ்லி - கே எல் ராகுல் ஜோடி சேர்ந்தனர்.

ஆசிய கிண்ணம்... சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது இந்திய அணி | India Beat Hong Kong By 40 Runs

ஹாங்காங் அணி பந்துவீச்சாளர்கள் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியதால் இந்திய ஜோடியால் தொடக்கத்தில் அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட முடியவில்லை. கே.எல் ராகுல் 39 பந்துகளில் 36 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் விராட் கோஹ்லியுடன் இணைந்து அதிரடி ரன்குவிப்பில் ஈடுபட்டார். இதனால் இறுதி கட்டத்தில் இந்திய அணியின் ரன் கணக்கு உயர்ந்தது. விராட் கோஹ்லி 40 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். அவரை தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் 22 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.

இறுதி ஓவரில் சூர்யகுமார் யாதவ் 4 சிக்சர்கள் அடித்து சிக்சர் மழை பொழிந்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 192 ஓட்டங்கள் குவித்தது. கோஹ்லி 59 ஓட்டங்கள் (44 பந்துகள்) சூர்யகுமார் யாதவ் 68 ஓட்டங்கள் (26 பந்துகள்) எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஆசிய கிண்ணம்... சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது இந்திய அணி | India Beat Hong Kong By 40 Runs

இதையடுத்து 193 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஹாங்காங் அணி களமிறங்கியது. தொடக்க வீர்ரகளாக களமிறங்கிய கேப்டன் நிசாகத் கான் (10 ஓட்டங்கள்), யாஸிம் முர்தசா (9 ஓட்டங்கள்) ஏமாற்றம் அளித்தனர்.

சிறப்பாக விளையாடி வந்த பாபர் ஹயாத் 35 பந்துகளில் 41 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்துவீச்சில் அவேஷ் கானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து சீரான இடைவெளியில் ஹாங்காங் அணி வீரர்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

அந்த அணியின் கிஞ்சித் ஷா 30 ஓட்டங்கள் எடுத்து ஆறுதல் அளித்தார். இருப்பினும் இந்திய அணியின் இலக்கை அடையும் அளவிற்கு ஹாங்காங் வீரர்கள் சோபிக்கவில்லை. இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஹாங்காங் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 152 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

ஆசிய கிண்ணம்... சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது இந்திய அணி | India Beat Hong Kong By 40 Runs

இதன் மூலம் 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-வது அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்திய அணி தரப்பில் புவனேஸ்வர் குமார், ஜடேஜா, அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங் தலா 1 விக்கெட்கள் கைப்பற்றினர். 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான் அணி ஏற்கனவே சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US