210 ஓட்டங்கள் இலக்கினை எட்ட முடியாமல் சுருண்ட நியூசிலாந்து: தொடரை வென்ற இந்திய அணி
India beat new zealand and win odi series: நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்றியது.
கடைசி ஒருநாள் போட்டியில் 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி ஒருநாள் தொடரை வென்றது.
இந்திய அணி 209
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பே ஓவல் மைதானத்தில் நடந்தது. முதலில் ஆடிய இந்திய அணி 42.1 ஓவர்களில் 209 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
அதிகபட்சமாக அக்ஷர் பட்டேல் 46 (55) ஓட்டங்களும், இஷான் கிஷன் 46 (58) ஓட்டங்களும் எடுத்தனர். மிட்செல் சான்ட்னர் மற்றும் ஜேக்கப் டுஃபி தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
தொடரை வென்ற இந்தியா
பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 48.1 ஓவர்களில் 187 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக டீன் ஃபாக்ஸ்கிராஃப்ட் 31 ஓட்டங்கள் எடுத்தார்.
அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளும், சிராஜ் மற்றும் அக்ஷர் பட்டேல் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
5 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கில் வென்றது. அர்ஷ்தீப் சிங் ஆட்டநாயகன் விருதையும், குர்நூர் பிரார் தொடர் நாயகன் விருதையும் பெற்றனர்.
