வாணவேடிக்கை காட்டிய ஹர்திக் பாண்டியா! 74 ஓட்டங்களில் சுருண்ட தென் ஆப்பிரிக்கா..மிரட்டல் வெற்றி
கட்டாக்கில் நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 101 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.
ஹர்திக் பாண்டியா 59 ஓட்டங்கள்
இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி கட்டாக்கில் நடந்தது.
முதலில் ஆடிய இந்திய அணியில் கில் 4 ஓட்டங்களிலும், அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ் 12 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
அபிஷேக் ஷர்மா 17 ஓட்டங்களில் அவுட் ஆனார். பின்னர் திலக் வர்மா 26 ஓட்டங்கள் எடுத்தும், அக்ஷர் பட்டேல் 23 ஓட்டங்கள் எடுத்தும் ஆட்டமிழக்க, ஹர்திக் பாண்டியா அதிரடியில் இறங்கினார்.
அவரது மிரட்டலான ஆட்டத்தினால் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 175 ஓட்டங்கள் குவித்தது. ருத்ர தாண்டவம் ஆடிய ஹர்திக் பாண்டியா 28 பந்துகளில் 59 ஓட்டங்கள் (4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள்) விளாசினார்.
சுருண்ட தென் ஆப்பிரிக்கா
பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 12.3 ஓவரில் 74 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக பிரேவிஸ் 22 (14) ஓட்டங்கள் எடுத்தார். 
ஹர்திக், அர்ஷ்தீப், வருண் மற்றும் அக்ஸர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதன்மூலம் இந்திய அணி 101 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
டி20 கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க அணி மிகக்குறைந்த ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆன போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |