இலங்கையை சுழலில் சாய்த்த மானவ் சுதர்: 165 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி
காலியில் நடந்த டெஸ்டில் இந்திய அணி 165 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
காலியில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், இந்திய அணி 165 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சோனல் தினுஷா 84 ஓட்டங்கள்
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் காலியில் நடந்தது.
இந்திய அணி 372 ஓட்டங்கள் இலக்கினை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி 47 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.
பின்னர் நிலைத்து நின்று ஆடிய தனஞ்செய டி சில்வா 59 ஓட்டங்கள் எடுத்து வெளியேற, திக்வெல்ல 10 ஓட்டங்களில் அவுட் ஆனார்.
வெற்றிக்காக போராடிய சோனல் தினுஷா (Sonal Dinusha) 84 ஓட்டங்கள் குவித்த நிலையில் மானவ் சுதர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் மானவ் சுதரின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, இலங்கை அணி 206 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதன்மூலம் இந்திய அணி 165 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. மானவ் சுதர் (Manav Suthar) 6 விக்கெட்டுகளும், பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |