அவர் பேட்டிங்கை பார்க்கும் போது மகிழ்ச்சி! இலங்கையை இந்தியா வீழ்த்தியதையடுத்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா
இலங்கை அணியை முதல் டி20 போட்டியில் இந்தியா வீழ்த்திய நிலையில் அணி வீரர்களை கேப்டன் ரோகித் சர்மா பாராட்டியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதும் 3 ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரின் முதல் ஆட்டம் நேற்று லக்னோவில் நடந்தது.
இப்போட்டியில் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் இஷான்கிஷன் 56 பந்தில் 89 ரன் எடுத்தார். இலங்கை அணியில் அதிகபட்சமாக அசலங்கா 53 ரன் எடுத்தார்.
வெற்றிக்கு பின்னர் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், இஷான்கிஷனின் மன நிலையும், திறமையும் எனக்கு தெரியும். அவர் பேட்டிங் செய்ததை பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. 6 ஓவர்களுக்கு பிறகு அவர் நல்ல அடித்தளத்தை உருவாக்கினார்.
அது மகிழ்ச்சியாக இருந்தது. அவர் இடைவெளிகளை கண்டறிந்து பந்துகளை விளாசினார். ஜடேஜா மீண்டும் அணிக்கு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரிடம் இருந்து இன்னும் அதிகமானவற்றை நாங்கள் விரும்புகிறோம்.
அதனால்தான் அவரை முன்னதாகவே பேட்டிங் செய்ய அனுப்பினோம்.
வர இருக்கும் போட்டிகளில் இனி அதை நீங்கள் பார்க்கலாம். அவர் நல்ல பார்மில் இருக்கிறார். குறிப்பாக அவரை டெஸ்ட் கிரிக்கெட்டில், ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் பயன்படுத்த விரும்புகிறோம்.