இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசியை அங்கீகரித்த உலக சுகாதார அமைப்பு!
கோவிட்-19க்கு எதிராக இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட 'கோவாக்சின்' தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் அளித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு புதன்கிழமை Covaxin தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுப் பட்டியலில் (Emergency Use Listing-EUL) சேர்த்தது.
இதன் மூலம், 'மேட் -இன்-இந்திய' தடுப்பூசியான கோவாக்சின் பிற நாடுகளால் அங்கீகரிக்கப்படும்.
மேலும் இந்தத் தடுப்புசியை பெற்ற இந்தியர்கள் சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை. அதாவது வெளிநாட்டு பயணத்தின் போது கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டியதில்லை.
#Covaxin vaccine was also reviewed by WHO’s Strategic Advisory Group of Experts on Immunization (SAGE), and recommended use of this vaccine in two doses, with a dose interval of four weeks, in all age groups 18 and above. #COVID19
— World Health Organization (WHO) (@WHO) November 3, 2021
Covaxin தடுப்பூசியானது, அனைத்து வயதினருக்கும் (18+) நான்கு வார இடைவெளியில் இரண்டு அளவுகளுக்கு மேல் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், குழந்தைகளுக்குப் பயன்படுத்துவதற்கு எந்தப் பரிந்துரையும் செய்யப்படவில்லை, மேலும் கர்ப்பிணிப் பெண்களுக்குப் பயன்படுத்துவதற்கான தரவு பாதுகாப்பு அல்லது செயல்திறனை மதிப்பிடுவதற்கு போதுமானதாக இல்லை என்று WHO தெரிவித்துள்ளது.
WHO-க்கு தடுப்பூசி பரிந்துரைகளை வழங்கும் ஒரு சுயாதீன குழுவான 'தொழில்நுட்ப ஆலோசனைக் குழு' (Technical Advisory Group) கோவாக்சின் COVID-19 க்கு எதிரான பாதுகாப்பிற்கான தரநிலைகளை பூர்த்தி செய்கிறது என்று தீர்மானித்துள்ளது. தடுப்பூசியின் நன்மை அபாயங்களை விட அதிகமாக உள்ளது மற்றும் இந்த தடுப்பூசியை பயன்படுத்தப்படலாம், என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
#Covaxin was found to have 78% efficacy against #COVID19 of any severity, 14 or more days after the second dose, and is extremely suitable for low- and middle-income countries due to easy storage requirements.
— World Health Organization (WHO) (@WHO) November 3, 2021
மேலும், SAGE ஆலோசனைக் குழுவினால் கோவாக்சின் தடுப்பூசி மதிப்பாய்வு செய்யப்பட்டது என்று WHO ட்வீட் செய்தது.
கோவாக்சின் "இரண்டாவது டோஸுக்குப் பிறகு, கோவாக்சின் 78 சதவிகிதம் பயனுள்ளதாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது, மேலும் எளிதான சேமிப்புத் தேவைகள் காரணமாக குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு மிகவும் ஏற்றது" என WHO உறுதிப்படுத்தியது.
கோவாக்சின் தடுப்புசி இதுவரை 121 மில்லியன் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Covishield மற்றும் Covaxin தவிர, WHO இதுவரை அமெரிக்க மருந்து நிறுவனங்களான ஃபைசர், ஜான்சன் & ஜான்சன் மற்றும் மாடர்னா மற்றும் சீனாவின் சினோபார்ம் தயாரித்த தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.