இந்தியாவின் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை... அவர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு
இந்தியாவில் முகேஷ் அம்பானி, கெளதம் அதானி உட்பட பல எண்ணிக்கையிலான கோடீஸ்வரர்கள் உள்ளனர்.
191 கோடீஸ்வரர்கள்
இவர்கள் அனைவரும் தங்கள் தொழில் நிறுவனங்களை இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் முன்னெடுத்து வருகின்றனர். வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், ஆண்டுக்கு ஆண்டு இந்தியாவின் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவே தெரிய வந்துள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில், இந்தியாவில் தற்போது 191 கோடீஸ்வரர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2024ல் மட்டும் புதிதாக 26 பேர்கள் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இணைந்துள்ளனர்.
இந்த 191 கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு என்பது 950 பில்லியன் அமெரிக்க டொலர் என்றே கூறப்படுகிறது. உலக அளவில் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பில் இந்தியா மூன்றாமிடைத்தை எட்டியுள்ளது.
6 சதவிகிதம் அதிகம்
முதலிடத்தில் 5.7 டிரில்லியன் டொலர்களுடன் அமெரிக்காவும், இரண்டாமிடத்தில் 1.34 டிரில்லியன் டொலர்களுடன் சீனாவும் உள்ளது. இந்தியாவில் 10 மில்லியன் டொலருக்கும் அதிகமான சொத்துக்களுடன் 85,698 பேர்கள் உள்ளனர் என்றும், இது 2023 ஆம் ஆண்டினை ஒப்பிடுகையில் 6 சதவிகிதம் அதிகம் என்றும் கூறப்படுகிறது.
2023ல் இந்த எண்ணிக்கை 80,686 என இருந்துள்ளது. 2028ல் இந்த எண்ணிக்கை 93,753 என அதிகரிக்கலாம் என்றும் அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் வளர்ந்து வரும் செல்வம் என்பது அதன் பொருளாதார மீள்தன்மை மற்றும் நீண்டகால வளர்ச்சி திறனை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தொழில்முனைவோரின் வேகம், உலகளாவிய ஒருங்கிணைப்பு மற்றும் வளர்ந்து வரும் தொழில்கள் ஆகியவற்றால் உந்தப்பட்டு, அதிக நிகர மதிப்புள்ள தனிநபர்களின் எண்ணிக்கையில் முன்னெப்போதும் இல்லாத உயர்வை நாடு காண்கிறது என்றே பொருளாதார நிபுணர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |