இந்திய வீரர்கள் ஏன் கருப்பு பட்டை அணிந்து விளையாடினார்கள் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்
இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் ஏன் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகிறார்கள் என்ற தகவலை பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி சற்று முன் வரை இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்பிற்கு 92 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.
இப்போட்டியில் இந்திய அணி வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர். இது குறித்து பிசிசிஐ தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், மும்பை கிரிக்கெட் வீரரும், புகழ் பெற்ற பயிற்சியாளருமான Vasoo Paranjape மறைவு காரணமாக, அவருக்கு அஞ்சலு செலுத்தும் விதமாக இன்று இந்திய அணியினர் கருப்பு பட்டை அணிந்து விளையாடுவதாக குறிப்பிட்டுள்ளது.
The Indian Cricket Team is sporting black armbands today to honour the demise of Shri Vasudev Paranjape.#TeamIndia pic.twitter.com/9pEd2ZB8ol
— BCCI (@BCCI) September 2, 2021
கடந்த 1956-1970 வரை மும்பைக்காக ஒரு சில முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ள இவர், உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறந்த பயிற்சியாளர்களில் ஒருவராக புகழ் பெற்றவர்.
குறிப்பாக இவர், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், ரோஹித் சர்மா போன்ற திறமையான பேட்ஸ்மேன்களின் திறனை மேம்படுத்த உதவியவர் என்பது குறிப்பிடத்தக்கது.