அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு இந்திய வம்சாவளி வைத்தியர் போட்டி
அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் பிரசாந்த் ரெட்டி போட்டியிடுகிறார்.
இந்திய வம்சாவளி அமெரிக்க மருத்துவர் டாக்டர் பிரசாந்த் ரெட்டி அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் கன்சாஸின் மூன்றாவது 'காங்கிரஸ்' மாவட்டத்தில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.
ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஷரிஸ் டேவிட்ஸ் தற்போது இந்த தொகுதியின் எம்.பி.யாக உள்ளார். 2018 முதல் தொடர்ந்து மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்ட ஷரிஸ் டேவிட்ஸை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.
கன்சாஸில் ஆகஸ்ட் 6-ஆம் திகதி முதன்மைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
சென்னையில் பிறந்த டாக்டர் பிரசாந்த் ரெட்டிக்கு சபாநாயகர் மைக் ஜான்சன் உள்ளிட்ட குடியரசு கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
டாக்டர் ரெட்டியின் குடும்பம் அவருக்கு ஐந்து வயதாக இருந்தபோது சென்னையில் இருந்து கன்சாஸுக்கு குடிபெயர்ந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |