டி20 போட்டிகளில் வரலாறு படைத்த இந்திய அணி.! சஞ்சு சாம்சன் சாதனை சதம்
இந்தியா மற்றும் பங்களாதேஷுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இதன்மூலம், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடந்த இப்போட்டியில், இந்திய அணி 20 ஓவர்களில் 297 ஓட்டங்கள் குவித்து வரலாறு படைத்தது.
டெஸ்ட் விளையாடும் அணிகளில் டி20 தொடரில் எடுக்கப்பட்ட சிறந்த ஸ்கோர் இதுவாகும்.
முன்னதாக 2019ல் அயர்லாந்துக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணி 278 ஓட்டங்கள் குவித்தது.
இன்றைய போட்டியில் வங்கதேச அணி 19 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 156 ஓட்டங்கள் எடுத்தது.
இந்திய அணி தரப்பில் ரவி பிஷ்னோய் 3 விக்கெட்டுகளையும், நிதிஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்திய அணி சிறந்த எண்ணிக்கை
டி20 போட்டிகளில் இந்திய அணியின் சிறந்த எண்ணிக்கை இதுவாகும். முன்னதாக 2017ல் இலங்கைக்கு எதிராக இந்திய அணி 260 ஓட்டங்கள் குவித்தது அதிகபட்சமாக இருந்தது.
சஞ்சு சாம்சன் சாதனை சதம்
இந்திய அணியின் சஞ்சு சாம்சன் 47 பந்துகளில் 111 ஓட்டங்கள் குவித்தார்.
வங்கதேச அணிக்கு எதிராக அஞ்சு சாம்சன் தனது முதல் டி20 சதத்தை அடித்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் வங்கதேச பந்துவீச்சாளர்களுக்கு எதிராக வெறும் 41 பந்துகளில் தனது சதத்தை அடித்தார்.
இந்த போட்டியின் போது ரோஹித் சர்மாவின் சாதனையையும் சஞ்சு முறியடித்தார். டி20 வரலாற்றில் ஒரு இரண்டாவது அதிவேக சதத்தை அடித்த இந்தியர் என்ற சாதனையும் சஞ்சு படைத்தார்.
சூர்யகுமார் யாதவ் 75 ஓட்டங்களும், ஹர்திக் பாண்டியா 47 ஓட்டங்களும், ரியான் பராக் 35 ஓட்டங்களும் எடுத்தனர்.
வங்கதேசத்தின் தன்சிம் ஹசன் சாகிப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
cricket, india vs bangladesh, ind vs ban, India all time T20 Record, Sanju Samson