அமெரிக்காவிடமிருந்து ரூ.837 கோடிக்கு துப்பாக்கிகளை ஓர்டர் செய்த இந்தியா
அமெரிக்காவிடம் இருந்து 73,000 SiG Sauer தாக்குதல் துப்பாக்கிகளை இந்தியா ஓர்டர் செய்துள்ளது.
இதற்காக அமெரிக்காவுடன் ரூ.837 கோடி ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
இதே SiG Sauer தாக்குதல் துப்பாக்கிகளை இந்தியா ஏற்கெனவே ஒருமுறை அமெரிக்காவிடம் ஓர்டர் கொடுத்து வாங்கியுள்ளது. இது இரண்டாவது ஓர்டர் ஆகும்.
முன்னதாக 2019 பிப்ரவரியில், விரைவான கொள்முதலின் கீழ், இந்தியா ரூ.647 கோடிக்கு 72,400 SiG-716 துப்பாக்கிகளுக்கு ஆர்டர் கொடுத்தது.
இதையடுத்து இரண்டாவது கொள்முதலுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் (DAC) 2023 டிசம்பரில் ஒப்புதல் அளித்தது.
அதன் விநியோகத்திற்குப் பிறகு, இந்திய இராணுவத்திடம் 1.45 லட்சத்துக்கும் மேற்பட்ட SiG-716 தாக்குதல் துப்பாக்கிகள் இருக்கும்.
2018-19 ஆம் ஆண்டில், அதிகரித்துவரும் துப்பாக்கிகளின் தேவைக்காக ரஷ்யாவிடமிருந்து AK-203 (Kalashnikov) துப்பாக்கிகளை இந்தியா ஆர்டர் செய்தது. ஆனால் அவற்றைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டதால், இந்தியா 2019 பிப்ரவரியில் அமெரிக்க நிறுவனமான சிக் சாவுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
முதல் தொகுப்பில் இருந்த 72,400 துப்பாக்கிகளில், 66,400 துப்பாக்கிகள் இராணுவத்திற்கும், 4,000 விமானப்படையுக்கும், 2,000 கடற்படைக்கும் வழங்கப்பட்டன. இவை படிப்படியாக I.N.S.A.S. துப்பாக்கிக்கு மாற்றாக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India US Rifles Deal, Sig Sauer Assault rifles, Sig-716 Assault rifles