உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் ஜேர்மனியை இந்தியா முந்தலாம்: சா்வதேச நிதியத்தின் தரவுகள்...
இந்தியா, உலகின் மிகப்பெரிய நாடுகள் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கலாம் என சா்வதேச நிதியத்தின் தரவுகள் கூறுகின்றன.
2028ஆம் ஆண்டில் இது நிறைவேறக்கூடும் என சா்வதேச நிதியத்தின் தரவுகள் கணித்துள்ளன.
2028ஆம் ஆண்டில், ஜேர்மனியையும் ஜப்பானையும் முந்தி, இந்தியா உலகின் மிகப்பெரிய நாடுகள் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கக் கூடும் என சா்வதேச நிதியத்தின் தரவுகள் கணித்துள்ளன.
The Economic Times வெளியிட்டுள்ள செய்தி ஒன்று, பட்டியலின் முதல் மற்றும் இரண்டாவது இடங்களில், அமெரிக்காவும் சீனாவும் தொடர்ந்து நீடிக்கும் என்கிறது.
உலக அளவில் இந்தியா மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக மாறுவதற்கு சில காரணங்களை பொருளாதார நிபுணர்கள் வைத்துள்ளனர்.
அவற்றில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தனித்தன்மையுடன் இருப்பதே முதல் காரணமாக கூறப்பட்டுள்ளது.
வளர்ந்த நாடுகள் பல கூட, கோவிட் மற்றும் உக்ரைன் போர் காரணமாக பொருளாதாரத்தில் மிகப்பெரிய வீழ்ச்சியை கண்டன. இந்தியாவிலும் அவை ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தினாலும் அது மிகப்பெரிய தாக்கத்தை தாக்கமாக இருக்கவில்லை.
இந்திய ரூபாயின் மதிப்பும் சரிந்து வந்தாலும் மற்ற நாடுகளின் நாணயங்களை ஒப்பிடும்போது இந்திய ரூபாய் இன்னும் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது என்பதே பொருளாதார வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.
உலக அளவில் பணவீக்கம் அதிகரித்து வருவதை போல் இந்தியாவிலும் பணவீக்கம் அதிகரித்து வருகிறது என்பதும் உண்மைதான். ஆனாலும் இந்தியாவின் வங்கி அமைப்பு எப்போதும் போல் வலுவாக உள்ளது என்றும் கடன் சுழற்சி அதிகரித்து வருவதால் பணவீக்கம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் கூறப்படுகிறது.
சமீபத்தில், பிரித்தானியாவை பின்னுக்குத் தள்ளி உலகின் ஐந்தாவது மிகப் பெரும் பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.