இந்தியாவின் மூத்த ரோ அதிகாரியை அதிரடியாக வெளியேற்றிய கனடா! நேரு குணரட்னம் சிறப்பு பேட்டி
இந்தியாவின் மூத்த ரோ அதிகாரியை கனடா அதிரடியாக வெளியேற்றியது குறித்து அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தனது கருத்து தெரிவித்துள்ளார்.
நேரு குணரட்னத்தின் ஊடறுப்பு நிகழ்ச்சி பேட்டி
இந்தியா கனடா இடையே இராஜதந்திர அளவில் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கனடாவின் அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் அதுகுறித்து லங்காசிறி-யின் ஊடறுப்பு நிகழ்ச்சிக்கு பேட்டி ஒன்றை வழங்கியுள்ளார்.
அதில் கனடாவில் சீக்கியர்கள் நீண்ட காலமாக இருக்கிறார்கள், பிரித்தானியர்கள் இங்கு வந்து ரயில் பாதையை உருவாக்கிய காலத்திலேயே சீக்கியர்கள் இங்கு இருக்கிறார்கள் இப்போது பெரும் எண்ணிக்கை அளவில் கனடாவில் சீக்கியர்கள் இருக்கிறார்கள்.
அவர்களில் ஒரு பகுதியினர் இந்தியாவின் பஞ்சாப்பில் தனிநாடு கோரும் எண்ணங்களை கொண்டவர்களாக இருக்கிறார்கள். கனடாவை போன்ற பிரித்தானியாவிலும், அவுஸ்திரேலியாவிலும் சீக்கியர்கள் அதிகம் வசிக்கின்றனர், அவர்களை இது போன்ற உணர்ச்சிப்பூர்வமான கருத்துகளை வெளிப்படுத்தாமல் வைக்குமாறு இந்தியா தொடர்ந்து தெரிவித்து வருகிறது.
ஆனால் சீக்கியர்கள் போன்ற இனக்குழுக்கள் தங்கள் இனம் சார்ந்த கோரிக்கையை முன்வைக்கும் போது அவர்களை கட்டுப்படுத்துவதற்கான முகத்தில் மேற்கத்திய நாடுகள் இல்லை.
இதனால் அவ்வாறானவர்களை நேரடியாகவே பெயரை குறிப்பிட்டு பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி விடுகிறார்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் சீக்கியர்கள் பெரும்பாலாக வசிக்கும் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் உள்ள அவர்களின் மத கோவில் முன்பு இத்தகைய எண்ணப்பாடு கொண்ட தலைவர் ஒருவர் ஜூலை 18ம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
இது தொடர்பாக கனேடிய புலனாய்வு பிரிவு நடத்திய விசாரணையில் இந்திய அரசின் முகவர்கள் இருப்பதாக அறியப்பட்டது. இது போன்ற பல முக்கிய தகவல் உள்ளடக்கிய அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னத்தின் விரிவான பேட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |