கனடாவில் கோவிட் நெகட்டிவ் சான்றிதழுடன் வரும் இந்தியர்கள் மட்டுமே அனுமதி; மாணவர்கள் அவதி
பரிசோதனை செய்து, கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழுடன் வரும் இந்தியர்களை மட்டுமே, கனடா அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்தியா - கனடா இடையே நேரடி விமான போக்குவரத்துக்கான தடை, செப்டம்பர் 30-ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் இருந்து வேறு நாட்டிற்குச் சென்று, அங்கு கொரோனா பரிசோதனை செய்து, கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழுடன் வரும் இந்தியர்களை மட்டுமே, கனடா அரசு அனுமதி அளித்துள்ளது.
இதனால், கனடாவில் படிக்கச் செல்லும் இந்திய மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து, கனடா பல்கலையில் படிக்கும் இந்திய மாணவி லரினா குமார் (Lareina Kumar) கூறியதாவது, கனடா அரசின் கடுமையான விதிமுறையால், இந்தியாவில் இருந்து துபாய் சென்று, அங்கிருந்து ஸ்பெயின், மெக்சிகோ சென்று, அதன் பின் தான் கனடா செல்லும் நிலை உள்ளது.
இதனால், கனடா பயணச் செலவு, ரூ. 1.50 லட்சத்தில் இருந்து, ரூ. 5 லட்சமாக உயர்ந்து விட்டது. மேலும், வெளிநாட்டில் இரு நாட்கள் தங்கி கொரோனா சான்றிதழ் வாங்குவது கடும் அலைச்சலாக உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.