இந்தியாவில் பிறந்தது 2026 புத்தாண்டு: களைகட்டிய கொண்டாட்டங்கள்!
இந்தியாவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் சிறப்பாக மக்கள் வரவேற்றுள்ளனர்.
2026ம் புத்தாண்டு
இந்தியா, தாய்லாந்து அமெரிக்கா உட்பட பல நாடுகளில் 2026 ஆம் ஆண்டு புத்தாண்டை பொதுமக்கள் கொண்டாட்டத்துடன் உற்சாகமாக வரவேற்றுள்ளனர்.
தமிழகத்தில் சென்னை உட்பட பல நகரங்களில் வாணவேடிக்கையுடன் புத்தாண்டை மக்கள் கொண்டாட்டத்துடன் வரவேற்று வருகின்றனர்.

உலகம் முழுவதும் ஜனவரி 1ம் திகதி புத்தாண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், 2025ம் ஆண்டு நிறைவடைந்து 2026 ம் ஆண்டு புதிய ஆண்டு பிறந்துள்ளது.
சென்னையில் மட்டும் சுமார் 19,000 பொலிஸார் மற்றும் 1500 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் புத்தாண்டை முன்னிட்டு குடியரசு தலைவர், ஆளுநர், முதல்வர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |