இப்படி செய்தால் அவுஸ்திரேலியாவை ஈசியாக வென்று விடலாம்: முன்னாள் வீரர் ஜாகிர் கான் கருத்து
இந்த அணியுடன் சென்றால் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியை எளிதாக வென்று விடலாம் என இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான் தெரிவித்துள்ளார்.
ஜாகிர் கான் கருத்து
உலக கோப்பை தொடரில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா மோதும் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்திய அணி மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் சென்னை மைதானத்தில் களமிறங்கினால் அவுஸ்திரேலிய அணியை எளிதாக வென்று விடலாம் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜாகிர் கான் தெரிவித்துள்ள தகவலில், பொதுவாக சென்னை மைதானத்தை மெதுவான மற்றும் டர்னிங் விக்கெட்டோடு தொடர்பு படுத்துவர்.
அப்படி இருக்கையில், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் என மூன்று உலக தரம் வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள்.
அவுஸ்திரேலிய அணியும் சுழற்பந்து வீச்சில் திணறுவதை சமீபத்தில் தொடர்ந்து பார்த்து வருகிறோம், எனவே சென்னை மைதானத்தில் இந்திய அணி 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் சர்துல் தாக்கூர் தனது இடத்தை இழப்பார் என்று நினைக்கிறேன் எனவும் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |