ட்ரம்ப் விதித்த 50 சதவீத வரிக்கு இந்தியாவின் முதல் பதிலடி
ட்ரம்ப் விதித்த 50 சதவீத வரிக்கு இந்தியா தனது முதல் பதிலடியை கொடுத்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் இந்தியாவிலிருந்து வரும் பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்ததற்கு பதிலடி நடவடிக்கையாக, இந்திய அரசு 40 முக்கிய நாடுகளில் ஆடை ஏற்றுமதியை ஊக்குவிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
இதில், பிரித்தானியா, ஜப்பான், கொரியா, ஜேர்மனி, பிரான்ஸ், அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் அடங்கும்.
இந்த நாடுகள் ஆண்டுக்கு 590 பில்லியன் டொலருக்கு மேற்பட்ட துணி மற்றும் ஆடைகளை இறக்குமதி செய்கின்றன. இதில் இந்தியாவின் பங்கு தற்போது 5 முதல் 6 சதவீதம் மட்டுமே.
எனவே, இந்த சந்தைகளில் இந்தியாவின் பங்கினை அதிகரிக்க Export Promotion Councils (EPCs) மற்றும் இந்திய தூதரகங்கள் இணைந்து செயல்பட உள்ளன.
அவர்கள் சந்தை ஆய்வு, உயர் தேவை உள்ள பொருட்கள் அடையாளம் காணுதல், மற்றும் சூரத், திருப்பூர் போன்ற சிறப்பு உற்பத்தி மையங்களை வெளிநாட்டு சந்தைகளுடன் இணைக்கும் பணிகளை மேற்கொள்வார்கள்.
EPCs சர்வதேச வர்த்தக கண்காட்சிகள், sector-specific பிரச்சாரங்கள் மற்றும் Brand India அடையாளத்தில் விற்பனை முயற்சிகளை முன்னெடுக்கும்.
Free Trade Agreements மூலம் இந்திய ஏற்றுமதியை போட்டியாளர்களுடன் சமமாகும் முயற்சியும் நடைபெறும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India textile exports, Trump 50% tariff India, Indian apparel industry, Export Promotion Council, textile trade war, global textile market, India trade diversification, Brand India textiles, US-India trade relations, free trade agreements India