பிரான்சில் 100-க்கும் மேற்பட்டோருக்கு பரவிய டெல்டா கொரோனா வைரஸ்! தீவிரமாக பரவும் அபாயம்
பிரான்சில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்த நிலையில், தற்போது இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் 81 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் நாட்டில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை,109900-ஆக அதிகரித்துள்ளது.
இதில் மருத்துவமனைகளில் 83480 பேரும், முதியோர் இல்லங்களில் 26,412 பேரும் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் நாட்டின் பல பகுதிகளில் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ், அதாவது உலகசுகாதார அமைப்பால் டெல்டா என்று பெயரிடப்பட்ட கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது.
இந்த வைரஸால், தற்போது வரை சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இல்-து-பிரான்சில் மட்டும் 21 பேரிற்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி இங்கு மக்கள் அதிகமான மக்கள். நெருக்கமான பகுதிகளாக இருப்பதால், இங்கு இந்த வைரஸ் மிகவும் வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் இதே போன்று ஆரம்பத்தில் சாதரணமாக பரவிய இந்த வைரஸ், இப்போது ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பரவியுள்ளது நினைவுகூரத்தக்கது.