இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஆணவம் ரொம்ப தலைக்கேறி இருக்கு - வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் காட்டம்!
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஆணவம் தலைக்கேறி உள்ளது என்று வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் ஆன்டி ராபர்ட்ஸ் வெளுத்து வாங்கியுள்ளார்.
வெளுத்து வாங்கிய வெஸ்ட் இண்டீஸ்
சமீபத்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் படுதோல்வியை சந்தித்தது. இதனால், இந்திய அணியை பலரும் சமூகவலைத்தளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர். ரோஹித் சர்மாவின் தலைமையிலான இந்திய அணியின் விளையாட்டை பலரும், பலவிதமான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவானான ஆன்டி ராபர்ட்ஸ் இந்திய அணி மீது பயங்கரமாக குற்றம் சாட்டியிருக்கிறார்.
இது குறித்து அவர் பேசுகையில்,
கிரிக்கெட் விளையாட்டில் இந்திய அணிக்கு ரொம்ப ஆணவம் தலைக்கு ஏறியுள்ளது. மற்ற அணி வீரர்களின் திறமையை குறைத்து பேசினார்கள்.
இந்திய அணி முதலில் டெஸ்ட் தொடர் முக்கியமா, டி20 தொடர் முக்கியமா என்பதில் கவனம் செலுத்தட்டும். இதற்கு பிறகு இந்திய அணி உலக டெஸ்ட் இறுதிப் போட்டிக்கு தங்களுடைய வலிமையை காட்டும் என்று நம்புகிறேன்.
ஆனால், இந்திய அணியில் ஒருவர் கூட சரியாக விளையாடவில்லை. ரகானே மட்டும்தான் மைதானத்தில் கடுமையாக விளையாடினார். ஆனால், அவர் கையில் பந்து பட்டு காயம் அடைந்தார்.
எனக்கு இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என்ற நம்பிக்கையே இல்லை. நான் எதிர்பார்த்தது போலதான் நடந்தது. ஏனென்றால், இந்திய வீரர்கள் சொதப்பி விடுவார்கள் என்று எனக்கு நன்றாகவே தெரிந்தது என்று வெளுத்து வாங்கியுள்ளார்.