இந்திய கிரிக்கெட் வீரரை மிரட்டிய பத்திரிகையாளர்: அணி நிர்வாகம் ஓய்வுபெற வற்புறுத்துவதாக குற்றச்சாட்டு!
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன விருத்திமான் சஹாவை பத்திரிகையாளர் மிரட்டியுள்ள நிலையில், அதுகுறித்த குறுந்செய்தி உரையாடலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்தியாவின் டெஸ்ட் அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக விருத்திமான் சஹா சில ஆண்டுகளாக விளையாடி வந்தார்.
கடந்த சில தொடர்களாக அவரது ஆட்டத்திறமையில் குறைவு ஏற்பட்டதால் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்த மாதம் நடைபெறவுள்ள இந்தியா இலங்கை டெஸ்ட் போட்டியின் வீரர்கள் பட்டியலிலும் அவர் பெயர் இடம்பெறவில்லை.
After all of my contributions to Indian cricket..this is what I face from a so called “Respected” journalist! This is where the journalism has gone. pic.twitter.com/woVyq1sOZX
— Wriddhiman Saha (@Wriddhipops) February 19, 2022
இந்த நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் அணி நிர்வாகம் தன்னை ஓய்வு பெற சொன்னதாக சொல்லி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
விருத்திமான் சஹா இந்த கருத்தை தெரிவித்ததை தொடர்ந்து அவரை பேட்டி காண்பதற்காக பத்திரிகையாளர் ஒருவர் தொடர்புகொண்டுள்ளார்.
விருத்திமான் சஹா, அந்த பேட்டிக்கு மறுப்பு தெரிவிக்கவே அவரை அந்த பத்திரிகையாளர் மிரட்டியுள்ளார்.
இந்த குறுந்செய்தி உரையாடல் நடைபெற்ற ஒரு சில நிமிடத்திற்குள் அதனை விருத்திமான் சஹா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, அதில் இந்திய கிரிக்கெட்டுக்கு எனது பங்களிப்புகள் அனைத்திற்கும் பிறகு.. "மதிப்பிற்குரிய" பத்திரிக்கையாளரிடம் இருந்து நான் எதிர்கொள்வது இதுதான்! இதழியல் எங்கே போய்விட்டது என்று தெரியவில்லை என்ற கருத்தையும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அந்த பத்திரிகையாளரின் செயலுக்கு பல்வேறு ஊடகவியலாளர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.