பெட்ரோல், டீசல் விலைக்கு நிவாரணம் - ரூ.10 சுங்கவரி குறைத்த மத்திய அரசு
மத்திய அரசு, நாட்டில் எரிபொருள் விலையை குறைக்கும் வகையில் பெட்ரோல், டீசல் மீதான சுங்கவரியை ரூ.10 குறைத்துள்ளது.
இதனால், பல நகரங்களில் எரிபொருள் விலை குறைந்து, பொதுமக்களுக்கு சிறிய அளவில் நிவாரணம் கிடைத்துள்ளது.
நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், “உலகளாவிய எண்ணெய் விலை உயர்வு மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக, இந்தியாவில் எரிபொருள் விலை அதிகரித்தது. இதனால் மக்களுக்கு ஏற்பட்ட சுமையை குறைக்க, சுங்கவரி குறைக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளது.
இந்த மாற்றத்தால், சென்னையில் பெட்ரோல் விலை ரூ.101.23, டீசல் ரூ.92.81-ஆக குறைந்துள்ளது. டெல்லியில் பெட்ரோல் ரூ.94.77, டீசல் ரூ.87.67 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களிலும் விலை குறைந்துள்ளது.

சுங்கவரி குறைப்பால், போக்குவரத்து செலவுகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், உலகளாவிய எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்தால், எதிர்காலத்தில் மீண்டும் விலை உயர வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மத்திய அரசின் இந்த முடிவு, பொதுமக்கள் மற்றும் தொழில்துறை வட்டாரங்களில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |