ரூ.67,000 கோடிக்கு ஆயுதங்கள் வாங்கும் திட்டம் - இந்திய பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல்
இந்திய இராணுவத்தின் திறனை வலுப்படுத்த ரூ.67,000 கோடிக்கு ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை வாங்கும் திட்டங்களுக்கு பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் (DAC) ஒப்புதல் அளித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமயிலான DAC கவுன்சில் இந்த பாதுகாப்பு கொள்முதல் திட்டங்களுக்கு ஒப்புதலை வழங்கியுள்ளது.
இந்த ஒப்புதலின் மூலம் இந்திய இராணுவத்திற்கு, BMP ரக டாங்கிகளின் திறனை அதிகரிக்க Thermal Imager அடிப்படையிலான Driver Night Sight தொழில்நுட்பம் வாங்கப்படும் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படையின் நகர்வுத்திறன் மற்றும் இராணுவ நடவடிக்கையை வேகமாக முன்னேற்றிச் செல்ல உதவும்.
அதேபோல், இந்திய கடற்படைக்கு தேவையான Compact Autonomous Surface Craft, BrahMos ஏவுகணை கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் லாஞ்சர்களை வாங்கவும் மற்றும் Barak-1 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை மேம்படுத்தவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இந்திய விமானப்படைக்கு, மலை ரேடார்கள் வாங்கவும், Saksham/Spyder ஆயுத அமைப்பை மேம்படுத்துவதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, முப்படைகளுக்கும் தேவையான Medium Altitude Long Endurance (MALE) ஆளில்லா விமானங்கள் மற்றும் Remotely Piloted Aircraft (RPA) தொலைதூரத்திலிருந்து மனிதர்களால் இயக்கப்படும் விமானங்களை வாங்க அனுமதி கிடைத்துள்ளது.
கூடுதலாக, C-17 மற்றும் C-130J விமானங்களை நிலைநிறுத்தவும், S-400 வான்பாதுகாப்பு அமைப்பின் வருடாந்திர பராமரிப்பு ஒப்பந்தத்திற்காகவும் கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Defence Acquisition Counsil, India Defence Procurement, Rajnath Singh DAC approval, Indian Army Navy Airforce upgrades, Indian Armed Forces Upgrades, MALE Drones, S400 maintenance contract