இலங்கை - இந்தியா முதல் டெஸ்ட்! ஜடேஜா அபார சதம்... 574 ரன்கள் குவித்த இந்திய அணி
இலங்கை - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 574 ரன்களுக்கு டிக்ளேர் செய்துள்ளது.
முதலில் விளையாடிய இந்திய அணி நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 357 ரன் குவித்து இருந்தது. ரிஷப்பண்ட் ஆட்டம் அதிரடியாக இருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் சதத்தை தவறவிட்டார்.
அவர் 97 பந்தில் 96 ரன்னும் (9 பவுண்டரி, 4சிக்சர்), விஹாரி 58 ரன்னும் எடுத்தனர். 100-வது டெஸ்டில் ஆடிய முன்னாள் கேப்டன் விராட் கோலி 45 ரன் எடுத்தார். ரவீந்திர ஜடேஜா 45 ரன்னுடனும், அஸ்வின் 10 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.
ரிஷப்பண்ட்டும் , ஜடேஜாவும் 5 வது விக்கெட்டுக்கு 104 ரன் எடுத்தது முக்கியமானதாகும். இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. இந்திய அணி தொடர்ந்து விளையாடியது. ஜடேஜா, அஸ்வின் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக ஜடேஜா அபாரமாக ஆடினார். அவர் 87 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 50 ரன்னை தொட்டார்.
?@imjadeja brings up his 2nd Test CENTURY ??.
— BCCI (@BCCI) March 5, 2022
Live - https://t.co/XaUgORcj5O #INDvSL @Paytm pic.twitter.com/L4rYFhWLlM
இருவரது ஆட்டத்தால் இந்தியா ரன்களை குவித்தது. தொடர்ந்து ஆடிய ஜடேஜா சதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் ஆடிய அஸ்வின் அரை சதம் அடித்தார். அவர் 61 ரன்கள் எடுத்திருந்த போது கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அடுத்து வந்த ஜெயந்த் யாதவ் 2 ரன்னில் வெளியேறினார். இந்நிலையில் ஜடேஜாவுடன் முகமது சமி ஜோடி சேர்ந்து ஆடினார். சமி நிதானமாக விளையாட ஜடேஜா அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். இந்திய அணி 574 ரன்கள் எடுத்திருந்த போது இந்திய கேப்டன் ரோகித் சர்மா டிக்ளேர் செய்வதாக அறிவித்தார்.
Innings break: India 574/8d#INDvSL pic.twitter.com/77uQal1OGR
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) March 5, 2022
ஜடேஜா 175 ரன்னிலும் சமி 20 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இலங்கை அணி தரப்பில் லக்மல், பெர்னாண்டோ, எம்புல்தெனியா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி தற்போது 1 விக்கெட்டை இழந்து 48 ரன்கள் எடுத்துள்ளது.
திரிமன்னே அஸ்வின் பந்துவீச்சில் அவுட்டானார். கேப்டன் திமுத் கருணரத்னே 27 ரன்களுடன் களத்தில் நிஷங்காவுடன் உள்ளார்.
Ashwin brings up his 12th Test fifty ?
— ICC (@ICC) March 5, 2022
His seventh-wicket stand with Jadeja has crossed 100.#WTC23 | #INDvSL | https://t.co/mo5BSRndfA pic.twitter.com/vz8oVIzspg