இலங்கைக்கு விரைந்த இந்திய பாதுகாப்பு அமைச்சர்: முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து ஆலோசிக்க திட்டம்
இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அபிவிருத்தி திட்டங்களை மையப்படுத்தி இலங்கைக்கு வருகை புரிந்துள்ளார் என இலங்கையின் அரசியல் ஆய்வாளரும் புலனாய்வு செய்தியாளருமான எம். எம். நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை வருகை
இலங்கையுடனான அபிவிருத்தி திட்டங்களை மையப்படுத்தியே இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை வருகை இருப்பதாக அரசியல் ஆய்வாளரும் புலனாய்வு செய்தியாளருமான எம். எம். நிலாம்டீன் லங்காசிறி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசாங்கத்தால் இலங்கையில் மேற்கொள்ள பட இருக்கும் எந்தவொரு திட்டத்திற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒப்பந்தங்களை முன்னெடுக்காத நிலையில் அதற்கான வழியாக இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கைக்கு வருகை புரிந்துள்ளார்.
இதில், இந்தியா இலங்கை இடையிலான பாலம், திருகோணமலை துறைமுகம். இலங்கைக்குள் எரிவாயுவை கொண்டு வரும் திட்டம் ஆகியவை குறித்து கலந்தாலோசிக்க பட இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் வடக்கு மாகாணத்தில் காலூன்ற இந்தியா திட்டமிடும் அதே நேரத்தில் ஜூலி சங் மூலமாக திட்டங்களை முன் நகர்த்த அமெரிக்கா முயன்று வருகிறது என்றும் எம். எம். நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
இதுபோன்று அரசியல் ஆய்வாளரும் புலனாய்வு செய்தியாளருமான எம். எம். நிலாம்டீன் வழங்கிய பல முக்கிய தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவில் விரிவாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |