இந்த சிறிய பொருளுக்காக பாகிஸ்தானை நம்பியிருக்கும் இந்தியா.., அது என்ன தெரியுமா?
ஒரே ஒரு பொருளுக்காக பாகிஸ்தான் நாட்டை இந்தியா நம்பியிருக்கிறது. அது என்ன பொருள் என்பதை பார்க்கலாம்.
பாகிஸ்தானுடன் உறவு
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான வர்த்தக உறவுகள் 2019 முதல் கணிசமாக குறைந்துள்ளது. இதனால், பாகிஸ்தானுடன் உறவு நன்றாக இல்லை என்றாலும் வர்த்தக ரீதியாக உறவுகள் இரு நாடுகளுக்கும் இடையே உள்ளது.
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு பல பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த பொருட்கள் இந்திய மக்களின் அத்தியாவசிய பொருட்களாக உள்ளது.
இந்நிலையில், 2019 -ம் ஆண்டிற்கு பிறகு பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானிடம் இருந்து இந்தியா சார்ந்து இருக்கும் முக்கிய பொருள் என்னவென்றால் கல் உப்பு தான். இந்தியா முழுவதும் இந்த பொருளுக்கு பாகிஸ்தானை நம்பியுள்ளது.
இந்தியாவில் கல் உப்பு என்பது மிகப்பெரிய தேவையாக உள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கல் உப்பு அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் ஜீலம் (Jhelum) மாவட்டத்தில் உள்ள கெவ்ராவில் (Khewra) அமைந்துள்ள உப்புச் சுரங்கம் தான் உலகத்தில் இரண்டாவது மிகப்பெரிய உப்புச் சுரங்கமாகும்.
இந்த சுரங்கத்தில் ஆண்டுக்கு 4.5 லட்சம் டன் கல் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவில் உள்ள கொச்சி, மும்பை, ஹைதராபாத் மற்றும் டெல்லியில் கல் உப்பு பதப்படுத்துதல் மற்றும் பேக்கேஜிங் அலகுகள் உள்ளன.
கடந்த 2018 முதல் 19 -ம் ஆண்டுகளில் இந்தியா இறக்குமதி செய்த கல் உப்பில் 99% பாகிஸ்தானில் இருந்து வந்தது என்றாலும் தற்போது அதன் தேவையை குறைத்துள்ளது.
பாகிஸ்தானில் ஒரு கிலோ கல் உப்பு 2 முதல் 3 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில் இந்தியாவில் 50 முதல் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |