இந்தியாவிற்கு ஜாக்பாட் - மிகப்பாரிய அளவில் அரிய பூமி கனிமங்கள் கண்டுபிடிப்பு
அதிர்ஷ்டவசமாக இந்தியாவில் மற்றொரு மாநிலத்தில் மிகப்பாரிய அளவிலான அரிய பூமி கனிமங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் சிங்கரௌலி மாவட்டத்தில் இந்த அரிய பூமி கனிமங்கள் (Rare Earth Elements - REEs) இருப்பு அதிகமாக உள்ளது தெரியவந்துள்ளது.
இது இந்தியாவிற்கான முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது. ஏனெனில், இதுவரை இத்தகைய கனிமங்களை பெரும்பாலும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது.
இந்நிலையில், இந்த கண்டுபிடிப்பு இந்தியாவை தொழில்நுட்பம், பசுமை ஆற்றல் மற்றும் பாதுகாப்பு துறைகளில் தன்னிறைவு அடைய உதவும் என கூறப்படுகிறது.
சிங்கரௌலியின் நிலக்கரி சுரங்கங்களில் Scandium மற்றும் Yttrium போன்ற அரிய கனிமங்கள் 250 ppm அளவில் உள்ளன. மேலும், நிலக்கரி அல்லாத பாறைகளில் 400 ppm வரை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை Coal India Limited நிறுவனம் ஆய்வின் அடிப்படையில் வெளியிட்டுள்ளது.
அரிய பூமி கனிமங்கள், Bastnasite, Monazite, Xenotime போன்ற பாறைகளில் இயற்கையாகவே காணப்படுகின்றன. இந்த அரிய கனிமங்கள் LED, LCD, Camera, Smartphone, மின்னனு சாதனங்கள், மின்சார வாகனங்கள், காற்றாலை மற்றும் மருத்துவ உபகரணங்களில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், இந்த கண்டுபிடிப்பு உலகளாவிய தொழில்நுட்ப போட்டியில் சீனாவை எதிர்க்கும் வகையில் இந்தியாவை கொண்டு செல்லும் என நம்பப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India rare earth discovery, Singrauli REE deposit, Madhya Pradesh minerals, Scandium and Yttrium India, India vs China rare earths, Coal India REE findings, Critical minerals India, Rare earth elements in India