படுதோல்வியடைந்த இங்கிலாந்து அணி! வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல கிண்டலடித்த பும்ராவின் மனைவி
இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் படுமோசமாக விளையாடி தோற்ற இங்கிலாந்து அணியை மறைமுகமாக கிண்டலடித்துள்ளார் பும்ராவின் மனைவி சஞ்சனா.
இதில் இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 25.2 ஓவர்களில் 110 ரன்களுக்கு சுருண்டது.
போட்டியின் போது விளையாட்டு தொகுப்பாளரும், ஜஸ்பிரித் பும்ராவின் மனைவியுமான சஞ்சனா கணேசன் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல இங்கிலாந்து அணியை கிண்டலடித்தார்.
While our bowlers bagged some ?s on the field, @SanjanaGanesan 'wrap'ped up some ?s off the field at #TheOval ?#ENGvIND #SonySportsNetwork pic.twitter.com/SzzQ9dVEaJ
— Sony Sports Network (@SonySportsNetwk) July 12, 2022
அதன்படி இங்கிலாந்து கிரிக்கெட் அணியையும் அதன் ரசிகர்களையும் அவர்களது சொந்த மைதானத்திற்குள் வறுத்தெடுத்தார். அதாவது மைதானத்தில் கீழ் பகுதியில் விதவிதமான உணவுகள் விற்கப்பட்ட நிலையில் அங்கு ரசிகர்கள் அதிக அளவில் அதை வாங்கி கொண்டிருந்தனர்.
அப்போது மைக்கில் பேசிய சஞ்சனா, போட்டியைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டாததால் அவர்கள் உணவுப் பகுதியில் நிரம்பியுள்ளனர் என்றார். பின்னர் ’crispy duck’ என்ற கடை அருகே சென்ற சஞ்சனா, இங்கிலாந்து வீரர்கள் யாரும் இந்த கடைக்கு அருகே வர விரும்ப மாட்டார்கள் என்றார்.
ஏனெனில் இங்கிலாந்து வீரர்கள் பலர் நேற்று duck (டக் அவுட்) ஆனார்கள், அதை குறிக்கும் வகையில் சஞ்சனா கிண்டலடித்தார்.
இது தொடர்பான வீடியோ காட்சி வைரலாகியுள்ளது.