அமைச்சராகும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் அசாருதீன் தெலங்கானா அமைச்சரவையில் இடம்பெற உள்ளார்.
முகமது அசாருதீன்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவராக இருந்தவர் முகமது அசாருதீன்(Mohammad Azharuddin).

இவரது தலைமையின் கீழான இந்திய அணி 1991 மற்றும் 1995 ஆசிய கோப்பையை வென்றது.
2009 ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த இவர், 2009 நாடாளுமன்ற தேர்தலில், உத்தர பிரதேசத்தின் மொராதாபாத் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி ஆனார்.

அதன் பின்னர் 2019 ஆம் ஆண்டில் 2019 முதல் 2022 வரை, அசாருதீன் ஹைதராபாத் கிரிக்கெட் சங்க(HCA) தலைவராக செயல்பட்டார்.
மேலும், தற்போது தெலங்கானா காங்கிரஸ் கமிட்டியின் செயல்தலைவராக உள்ளார். தெலங்கானாவில் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.
தெலங்கானா அமைச்சர்
அமைச்சரவையில், இஸ்லாமியர்களுக்கு பிரதிநித்துவம் இல்லை என்ற குரல் வலுக்க தொடங்கிய நிலையில், அசாருதீனுக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்பட உள்ளது.
சமீபத்தில் ஆளுநரின் ஒதுக்கீட்டின் கீழ் சட்டமன்றத்திற்கு (MLC) பரிந்துரைக்கப்பட்டார். இந்நிலையில், நாளை தெலங்கானா மாநில அமைச்சராக அசாருதீன் பதவி ஏற்க உள்ளார்.

2023 சட்டமன்ற தேர்தலில், ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் போட்டியிட்டு அசாருதீன் தோல்வியடைந்தார். அந்த வெற்றி பெற்ற பாரத் ராஷ்டிர சமிதி கட்சியை சேர்ந்த மகாந்தி கோபிநாத் கடந்த ஜூன் மாதம் காலமானார்.
இதனையடுத்து நவம்பர் 11 ஆம் திகதி நடைபெற உள்ள இடைத்தேர்தலில், அசாருதீனின் இஸ்லாமிய சமூக வாக்குகள், காங்கிரஸ் வெற்றிக்கு உதவும் என்ற வகையிலும் அமைச்சரவையில் இடம் வழங்கபடுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |