2030 காமன்வெல்த் போட்டியை நடத்த இந்தியா விருப்பம்
2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்த இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது.
2036 ஒலிம்பிக்கிற்கான கனவை நனவாக்கும் நோக்கத்தில், இந்தியா 2030 காமன்வெல்த் விளையாட்டுகளை (Commonwealth Games) நடத்துவதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது.
இந்தியா இதற்கு முன்பு 2010-ஆம் ஆண்டு டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டுகளை நடத்தியது.
அப்போது ஏற்பாடுகள் குறித்து சில குற்றச்சாட்டுகள் எழுந்தபோதிலும், விளையாட்டுக்கள் வெற்றிகரமாக முடிந்தன.
இந்த முறை, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (IOA) தலைவர் பி.டி. உஷா, "நாங்கள் விருப்ப முன்வைப்பு (Expression of Interest) மனுவை அனுப்பியுள்ளோம், மற்றும் காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பு (CGF) எங்கள் விண்ணப்பத்தை கவனித்துக் கொள்ளும் என்று நம்புகிறோம்," எனக் கூறினார்.
சமீபத்தில், விக்டோரியா மாநிலம் (அவுஸ்திரேலியா) மற்றும் டர்பன் (தென் ஆப்பிரிக்கா) ஆகியவை பொருளாதார காரணங்களால் போட்டியை நடத்துவதை ரத்து செய்தன.
இதனால், இந்தியா 2030 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்த தெரிவாகும் வாய்ப்பு அதிகம்.
மேலும், இந்தியா 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தவும் முயற்சி மேற்கொண்டு வருகிறது, இதில் அகமதாபாத் நகரம் முக்கியத்துவம் பெறுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |