மத்திய ஆசிய இஸ்லாமிய நாடுடன் கைகோர்க்கும் இந்தியா - சீனாவின் BRI திட்டத்திற்கு நேரடி போட்டியாக TITR
சீனாவின் BRI திட்டத்திற்கு நேரடி போட்டியாக TITR திட்டத்தை செயற்படுத்த மத்திய ஆசிய இஸ்லாமிய நாடுடன் இந்தியா கைகோர்துள்ளது.
சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு இனிஷியேட்டிவ் (BRI) மூலம் உலக வர்த்தக பாதைகளை கட்டுப்படுத்தும் முயற்சி பலமடைந்து வரும் நிலையில், இந்தியா இப்போது அதற்கு மாற்றான வழியை தேடுகிறது.
இதற்கான தீர்வாக Trans-Caspian International Transport Route (TITR) அல்லது Middle Corridor மிக முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த பாதையில் முக்கிய பங்காற்றும் முஸ்லிம் நாடாக கஜகஸ்தான் உள்ளது.
இந்தியா ஏன் BRI-ஐ எதிர்க்கிறது?
BRI திட்டத்தின் ஒரு பகுதியாக வரும் China-Pakistan Economic Corridor (CPEC), பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் வழியாக செல்கிறது என்பதால் இந்தியா இதனை தொடக்கத்திலிருந்தே எதிர்த்துவந்தது.
இது இந்தியாவின் பிரதேச முழுமைக்கு எதிரானது என வெளிவிவகார அமைச்சகம் தெளிவாக தெரிவித்துள்ளது.
TITR இந்தியாவுக்கான நன்மைகள்
இந்த வழி சீனாவிலிருந்து தொடங்காது, கஜகஸ்தானிலிருந்து துவங்குகிறது என்பதாலேயே இது முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.
TITR, இந்தியாவின் International North-South Transport Corridor (INSTC) உடன் இணையும். இது மும்பையிலிருந்து ரஷ்யா வழியாக ஐரோப்பாவை இணைக்கும் 7200 கிமீ நீளமுடைய வலையமைப்பாகும்.
கடல் பாதைகள் மீது கட்டுப்பாட்டை குறைக்கும் TITR
சூயஸ் கால்வாய் வழியாக 35 சதவீத இந்திய ஏற்றுமதி வர்த்தகம் நடக்கிறது. ஆனால், செங்கடல் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் பாதிக்கப்பட்டுள்ளதால், TITR போன்ற நில-கடல் வழிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
மாலுமிகள் செலவு 122% வரை உயர்ந்துள்ளதால், TITR ஒரு செலவுச்சுமை குறைக்கும் மாற்றாக காட்சியளிக்கிறது.

கேரளாவில் தரையிறங்கியது பிரித்தானிய Royal Air Force குழு., F-35B போர் விமானத்தை பழுது பார்க்க வந்த 17 நிபுணர்கள்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India Kazakhstan TITR, India vs China trade route, Trans Caspian Corridor India, INSTC India Europe route, BRI alternative India, Modi government trade strategy, India maritime trade crisis, Suez Canal Red Sea conflict, Kazakh Middle Corridor, Belt and Road India opposition