ஹாட்ரிக் தோல்வியடைந்த இந்தியா; கொண்டாடிய பாகிஸ்தான் பிரதமர்
india face hat trick loss in hong kong sixes: ஹாங்காங் சிக்ஸஸ் தொடரில், இந்திய அணி ஹாட்ரிக் தோல்வியடைந்துள்ளது.
ஹாட்ரிக் தோல்வியடைந்த இந்தியா
2026 ஹாங்காங் சிக்ஸஸ் தொடர், அக்டோபர் 31 ஆம் திகதி தொடங்கி நவம்பர் 1 வரை நடைபெறுகிறது.
இன்று நடைபெற்ற லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் இந்தியா மோதியது. நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் துடுப்பாட்டம் ஆடிய இங்கிலாந்து அணி, 6 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 124 ஓட்டங்கள் குவித்தது.
இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக மார்ட்டின் ஆண்டர்சன் 51 ஓட்டங்களும், எட்வர்ட் ஜார்ஜ் பார்னார்ட் 35 ஓட்டங்களும் குவித்தனர்.

125 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் நிதிஷ் ராணா 4 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
ஷஷாங் சிங் 29 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ராகுல் திரிபாதி 56 ஓட்டங்களும் அணியை வெற்றி பெற வைக்க போராடினார்.

ராகுல் தெவாத்தியா மற்றும் குல்வந்த் கெஜ்ரோலியா ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழக்க, அணித்தலைவர் குர்னால் பாண்டிய 28 ஓட்டங்கள் குவித்தார்.
இந்திய அணி 6 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 121 ஓட்டங்கள் மட்டுமே எடுத்த நிலையில், இங்கிலாந்து அணி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கொண்டாடிய பாகிஸ்தான் பிரதமர்
ஏற்கனவே பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துடனான போட்டிகளில் தோல்வியடைந்த இந்திய அணி, இந்த தொடரில் விளையாடிய 3 போட்டிகளிலும் ஹாட்ரிக் தோல்வியடைந்துள்ளது.
இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தான் அணிக்கு பாகிஸ்தான் பிரதமர் செபாஸ் செரீப் எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Congratulations to our boys on a superb four-wicket victory over India in the opening clash of the Hong Kong Sixes 2026! It was a good game of cricket I also commend Chairman PCB Mohsin Naqvi @MohsinnaqviC42 and his team for their dedicated efforts in preparing and supporting our players.
— Shehbaz Sharif (@CMShehbaz) October 30, 2026
6 வீரர்கள், 6 ஓவரில் விளையாடும் போட்டியின் லீக் சுற்றில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதை பிரதமர் கொண்டாடும் அளவிற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி உள்ளதா என இணையவாசிகள் பாகிஸ்தான் பிரதமரை கிண்டல் செய்து வருகின்றனர்.