ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான், வங்கதேசத்தை ஊதி தள்ளி இந்தியா-இலங்கை இறுதிப்போட்டிக்கு தகுதி!
2021 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா, இலங்கை அணிகள் தகுதிப்பெற்றுள்ளன.
19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை போட்டி 2021 டிசம்பர் மாதம் 23ம் திகதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியது.
இப்போட்டியில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. 8 அணிகள் இரண்டு குரூப்பாக பிரிக்கப்பட்டு குரூப் சுற்றில் விளையாடின.
குரூப் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
இந்நிலையில் இன்று டிசம்பர் 30ம் திகதி ஐசிசி அகடாமி - ஓவல் 1 மைதானத்தில் நடந்த ஒரு அரையிறுதி போட்டியில் இலங்கை-பாகிஸ்தான் அணிகள் மோதின.
இதில், பாகிஸ்தானை 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது.
SRI LANKA EDGE PAKISTAN IN A THRILLER !!
— AsianCricketCouncil (@ACCMedia1) December 30, 2021
The team from the island nation successfully defend 147 and will face India in tomorrow's final.
?? - 147/10 in 44.5 overs
?? - 125/10 in 49.3 overs#ACC #U19AsiaCup #PAKVSL pic.twitter.com/KTmLlNyH07
அதேசமயம் இன்று டிசம்பர் 30ம் திகதி ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த மற்றொரு அரையிறுதியில் இந்தியா-வங்கதேசம் அணிகள் மோதின.
A spirited bowling performance from India help them reach the finals of the tournament.
— AsianCricketCouncil (@ACCMedia1) December 30, 2021
?? - 243/8 in 50 overs
?? - 140/10 in 38.2 overs#ACC #U19AsiaCup #INDVBAN pic.twitter.com/O5zJnvdxrw
இதில், வங்கதேசத்தை 103 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது.
நாளை டிசம்பர் 31ம் திகதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவிருக்கும் 2021 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் மோதவிருக்கின்றன.
1989 முதல் 8 முறை நடந்துள்ள 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பையை அதிகபட்சமாக இந்திய 6 முறை வென்றுள்ளது.
ஆப்கானிஸ்தான் ஒரு முறை வென்றுள்ளது, 2012ல் இறுதிப்போட்டி சமனில் முடிந்ததால் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு கோப்பை பகிர்ந்தளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நாளை நடைபெறவிருக்கும் இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி இலங்கை அதன் முதல் ஆசிய கோப்பை வெல்லுமா அல்லது இலங்கையை வீழ்த்தி இந்தியா 7வது முறையாக கோப்பை கைப்பற்றி தக்கவைத்துக் கொள்ளுமா என இரு நாட்டு ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.