தமிழ்நாடு முழுவதும் துணி கடை வைத்திருக்கும் போத்தீஸ் - அதன் உரிமையாளர் சொத்து மதிப்பு தெரியுமா?
தமிழ்நாட்டின் பிரபல துணிக்கடைகளில் ஒன்றான போத்தீஸ் உரிமையாளரின் சொத்து குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியா முழுவதும் உள்ள பிரபல துணிக்கடை
தமிழ்நாட்டை பொறுத்தளவில் 4 தலைமுறையாக துணிகளை விற்பனை செய்யும் தொழிலில் போத்தீஸ் நிறுவனம் கொடிக்கட்டி பறந்துக்கொண்டிருக்கிறது.
முதலில் இந்த நிறுவனமானது சிறிய தொழிலாக தான் ஆரம்பிக்கப்பட்டது.

அதாவது விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிப்புதூர் அருகே உள்ள கூனங்குளம் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் போத்தி மூப்பனார் என்பவர் சைக்களில் சென்று துணிகளை விற்பனை செய்து வந்தார்.
அதையடுத்து அவருடைய கடின உழைப்பால் 1949 ஆம் ஆண்டு ஸ்ரீ வில்லிப்புதூர் பேரூந்து நிலையத்தில் 'போத்தி மூப்பனார் சன் அன் கோ' என்ற மிகப்பெரிய துணிக்கடையை ஆரம்பித்தார்.
அந்த காலத்தில் இவருடைய கடையில் தான் பலரும் துணிகளை வாங்கியுள்ளனர். இந்த தொழில் இவருடன் மட்டும் முடிந்துவிடக் கூடாது என நினைத்து, தனது மகனுக்கு இதன் சூட்சமங்களை கற்றுக்கொடுத்துள்ளார்.

போத்தி மூப்பனாரின் ஒரே மகனான சடையாண்டி மூப்பனார் தந்தையின் துணிக்கடை வியாபாரத்தை பார்க்க ஆரம்பித்தார். பின் திருநெல்வேலியில் போத்தீஸ் என்ற கடையை ஆரம்பித்தார்.
அதையடுத்து 2000 ஆம் ஆண்டில் சென்னையில் மற்றுமொரு கிளையை ஆரம்பித்தார். இதனுடன் மட்டும் நிறுத்தி விடாமல் மூன்றாவது தலைமுறையும் இதை தொடர வேண்டும் என நினைத்து, சடையாண்டி மூப்பனார் அவரது பிள்ளைகளுக்கு இதன் பொறுப்பை வழங்கியுள்ளார்.
சடையாண்டி மூப்பனாரின் பிள்ளைகளான ரமேஷ், போத்திராஜ், முருகேசன், கந்தசாமி உள்ளிட்டோர் துணிக்கடையின் நெளிவு சுளிவினை கற்றுக்கொண்டு தொழிலை ஆரம்பித்தனர்.
தாத்தாவும் தந்தையும் அயராது உழைத்து வைத்த தொழில் பாதியில் நின்றுவிடக் கூடாது என எண்ணி அவர்களும் இதை தொடர்ந்து செய்ய ஆரம்பித்தார்கள்.

அவர்கள் அனைவரும் கடுமையாக உழைத்து 'போத்தீஸ்' என்ற பெயரை நிலைநாட்டினார்கள். இந்த பெயர் தெரியாத எவரும் தமிழ்நாட்டில் இருக்க மாட்டார் என்ற அளவிற்கு இது பெரும் வளர்ச்சியை அடைந்தது.
நெல்லை, சென்னை, திருச்சி, கோவை, என தமிழ்நாட்டின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் கிளைகள் உள்ளன.
தற்போது 4ஆவது தலைமுறையாக சடையாண்டி மூப்பனாரின் பேரன், பேத்திகள் போத்தீஸ் குழுமத்தை கவனித்து வருகின்றனர்.

இது துணிக்கடையாக மட்டும் இருந்துவிடக் கூடாது என எண்ணி, தற்போது போத்தீஸ் ஸ்வர்ண மஹால் என்ற பெயரில் நகைக்கடைகளும் முக்கிய நகரங்களில் திறக்கப்பட்டுள்ளன.
சொத்து மதிப்பு
தமிழ்நாட்டை பொறுத்தளவில் 4 தலைமுறையாக துணிகளை விற்பனை செய்து வரும் போத்தீஸ் நிறுவன குடும்பத்தின் முழு சொத்தும், சுமார் 1.2 பில்லியன் அமெரிக்க டொர்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
You May Like This Video
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |