பூகம்பம் வருவதை முன்கூட்டியே எச்சரிக்கும் புதிய ஆப்!
இந்தியாவில் முதல் முறையாகப் பூகம்பம் வருவது குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை அளிக்கும் புதிய செல்போன் செயலி உத்தராகாண்ட் மாநிலத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பூகம்பம் என்னும் இயற்கை பேரழிவால் பலரும் துயருற்று வருகின்றனர். இதனால் சுனாமி ஏற்பட்டும் பல பேரழிவு உண்டாகிறது. இந்த பூகம்பம் ஏற்பட்ட பிறகு அது குறித்த செய்திகள் அதிக அளவில் வெளிவந்தாலும் அதை முன்கூட்டியே அறிய முடியாத நிலை உள்ளது.
இந்த நிலையில் ரூர்க்கி ஐஐடி (IIT-Roorkee) பூகம்பத்தை முன்கூட்டியே எச்சரிக்கும் வகையில் ஒரு செயலியை உருவாக்கி உள்ளது (Earthquake Early Warning (EEW) Mobile App).
இந்த செயலிக்கு Uttarakhand Bhookamp Alert எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த செயலியை உத்தராகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி (Pushkar Singh Dhami) அறிமுகம் செய்துள்ளார்.
இந்த செயலி ஆண்டிராய்ட் மற்றும் ஐ ஓ எஸ் ஆகிய இரு மேம்பொருளிலும் செயல்படக்கூடியது ஆகும். மேலும் இந்த செயலி மூலம் நிலநடுக்கம் ஏற்பட உள்ளதை முன்கூட்டியே தெரிந்து கொள்வதால் மக்கள் தங்களைப் பாதுகாக்க வேறு இடங்களுக்குச் செல்ல வழிவகை செய்யும் எனக் கூறப்பட்டுள்ளது.