உலகிலேயே முதல்முறையாக அணு உலை வெப்பத்தில் ஹைட்ரஜன் தயாரிக்கும் இந்தியா
உலகில் முதல்முறையாக அணு உலை வெப்பத்தைப் பயன்படுத்தி ஹைட்ரஜன் தயாரிக்கும் நிலையம் தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் தொடங்கபட்டுள்ளது.
இந்தத் திட்டம், Indira Gandhi Centre for Atomic Research (IGCAR)-இல் உள்ள Fast Breeder Test Reactor-இன் வெப்பத்தை பயன்படுத்துகிறது.
இந்த முயற்சியில் Copper-Chlorine Thermochemical Cycle என்ற முறையைப் பயன்படுத்தி, மின்சாரத்தைத் தவிர்த்து நேரடியாக அணு உலை வெப்பத்திலிருந்து ஹைட்ரஜன் உருவாக்கப்படுகிறது.
இதனால், 24 மணி நேரமும் இடையறாத பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி சாத்தியமாகிறது.

அணு ஆற்றல் துறை (DAE) இந்த திட்டத்தை ஜூன் 26, 2026 அன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. விஞ்ஞானிகள் இதை சுத்தமான எரிசக்தி பயணத்தில் வரலாற்று முக்கியதத்துவம் வாய்ந்த முன்னேற்றம் என குறிப்பிடுகின்றனர்.
இந்த முயற்சி, கார்பன் உமிழ்வை குறைக்கும் மற்றும் எரிசக்தி சுயாதீனத்தை வலுப்படுத்தும் முக்கியமான முன்னேற்றமாகும். ஹைட்ரஜன், எதிர்காலத்தில் வாகனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் மின்சார உற்பத்தி துறைகளில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |