இந்திய கால்பந்து வீரர் முகமது ஹபீப் காலமானார்
இந்திய கால்பந்தின் முன்னாள் வீரரான முகமது ஹபீப் (72), உடல்நலக்குறைவால் செய்வாய்க்கிழமை ஹைதராபாத்தில் காலமானார்.
kreedon
இவர் 1949 ஜூலை 17-ம் திகதி பிறந்தார்.1967ல் கோலம்பூரில் நடந்த மெர்டெக்கா கோப்பை கால்பந்து போட்டியின் மூலம் இந்தியா அணியில் அறிமுகமானார்.
இந்தியாவிற்க்காக 35 ஆட்டங்கள் 11 கோல்கள் அடித்திருக்கிறார்.அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற இவர் 1970ல் ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் வெண்கல பதக்கம் வென்றார்.
1977ம் ஆண்டு கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் மோகன் பாகன்-காஸ்மோஸ் கிளப் அணிகளுக்கிடையே நட்பு ரீதியிலான ஆட்டத்தில் பீலே அங்கம் வகித்த காஸ்மோஸ் அணிக்கு எதிராக கோலடித்த பெருமை ஹபீப் க்கு உண்டு.
Ei samay
ஆட்டத்திற்கு பிறகு ஹபீப் ஆட்டத்தை குறித்து பீலே செய்தியாளர்களிடம் புகழ்ந்து பேசியுள்ளார்.
பிற்காலத்தில் இந்திய கால்பந்து அகாடெமியில் தலைமை பயிற்சியாளராக ஹபீப் பணியாற்றி வந்தார்.அவர் மறைவுக்கு அகில இந்தியா கால்பந்து சங்கமே இரங்கல் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |